கே.ஆர். ஸ்ரீநிவாச ராகவன் / K.R. Srinivasa Raghavan con அற்புதக் கோயில்கள் / Arputha Kovilkal (Tamil Edition)
எத்தனையெத்தனை ஆலயங்கள்...?! தேவாரத்தில் இடம் பெற்றவை; ஆழ்வார்களின் பாடல் பெற்றவை; அருணகிரிநாதரால் போற்றப்பட்டவை; இந்தப் பட்டியலில் வராமல் புகழ்பெற்று விளங்கியவை; கவனிப்பாரற்று நலிந்திருப்பவை; புதிதாகப் பிரசித்தமானவை... இப்படி எண்ணற்ற ஆலயங்கள். ஒவ்வொன்றும் விசேஷமானதுதான். எங்கும் பரவியுள்ள காற்றுபோல், இறையருள் இந்தத் தலமனைத்திலும் பெருகிக்கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் சில தலங்கள், பிரத்யேகமான சில சிறப்புகளைக் கொண்டு இருக்கின்றன.அப்படிச் சில ஆலயங்களைத்தான் இப்போது தரிசிக்கப் போகிறோம். வெறும் ஆலய தரிசனம் மட்டுமல்ல; அங்குள்ள அற்புதங்கள் மற்றும் அதிசய நடைமுறை-களைப் பற்றிய செய்திகளோடு!